ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருந்தார்.