துப்பாக்கிச் சூட்டில் 25 வயது யுவதி பலி

Date:

பொரளை பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (13ஆம் திகதி) பொரளை, பேஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர என்ற இடத்தில் இராணுவ வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் உயிரிழந்தார்.

இதன்படி, குறித்த இரண்டு இராணுவ வீரர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...