தேர்தல் வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்க வேண்டும்!

Date:

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம்.”

  • இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்தச் செய்தியை தான் நான் புரிந்துகொண்டேன் என்றும் மனோ எம்.பி. கூறினார்.

“அரசை மீறி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை.

தேர்தல் நடத்த அரசு விடாது. ஆகவே, தேர்தல் இடம்பெற வேண்டுமானால், அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டும். வேறு மாற்று வழியில்லை” – என்று மனோ எம்.பி. மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...