அரச அச்சகத் தலைவர் மற்றும் திறைசேரி செயலாளரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைப்பாவைகள் எனவும் அவரின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாகவும் நேற்றைய தினம் தேர்தலை பிற்போடுவதற்கு அவர்கள் செயற்பட்ட விதத்தில் இருந்து இது தெளிவாகிறதென பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறுகிறார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் அரசியலமைப்பே உயர்ந்தது எனவும், அதற்குக் கீழே உள்ள சுற்றறிக்கைகள் உயர்வானவை அல்ல எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவது திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சகத் தலைவரின் பொறுப்பாகும்.
அச்சடிக்கும் பணிகளுக்கு பணம் தராவிட்டால், வரும் தேர்தலில் வாக்கு சீட்டு அச்சடிக்கப்பட மாட்டாது என அச்சகத் தலைவர் அறிவித்தால், கடந்த தேர்தல்களில் அச்சகத்தில் அச்சடிக்கும் பணிகள் எப்படி நடந்தன என்பதை சரிபார்க்க வேண்டும். அந்த சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட செலவுகள் கையில் பணமாக இல்லாமல் முறையாக வரவு வைக்கப்பட்ட செலவுகளா? என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
N.S