தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் அபராதம் விதித்து நியூ யார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் காரணமாக டிரம்ப் குடும்பத்தினர் நடத்திவரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.
டிரம்ப்க்கு அபராதம் 35.5 கோடி டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால் அவர் மேலும் அதிகமாக – ஏறத்தாழ 45 கோடி டாலர் வரை – தொகை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.