காவல்துறையினருக்கு தமிழ்மொழி கட்டாயம்

Date:

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என யாழ் பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்துக்கு இன்று(17) முற்பகல் வருகை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை வழங்கினார்.

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச்செயல்களை விரைந்து தடுக்குமாறும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் அதன் பாவனையை முற்றாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் பிரதிப் காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...