தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“மன்னிக்கவும், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், நான் ஊடகங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது,” என்று அவர் கூறியதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி 16 ஆம் திகதி கெசல்வத்தே, கிம்பத பகுதியில் நடைபெற்ற தூய்மையான இலங்கை நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர்களின் கேள்வியின் போது நிலந்தி கொட்டஹச்சி இவ்வாறு கூறினார்.