தயவு செய்து என்ன மன்னிச்சிருங்க.. – விஜய்

0
272

ஓட்டுச்சாவடியில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதற்காகவும், வரிசையில் நிற்காமல் ஓட்டு போட்டததற்காகவும், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்,

நடிகர் விஜய்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் தன் ஆதரவாளர்களை நேரடியாக களம் இறக்கியுள்ளார். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக போட்டியிட்ட விஜய் ஆதரவாளர்கள், இம்முறை, விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளனர். ஓட்டுப்பதிவு நாளான நேற்று விஜய், சென்னை, நீலாங்கரையில் உள்ள 192வது வார்டுக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஓட்டு அளித்தார்.சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்த விஜய்,

இம்முறை ரசிகர்கள் புடைசூழ காரில் வந்தார். விஜய்யின் வரவால், ஓட்டுச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், வரிசையில் நிற்காமல் நேராக சென்று ஓட்டு போட்டார். அதற்காக, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், தேனாம்பேட்டையில் ஓட்டளித்தார்.

நடிகர் அருண்விஜய் ஈக்காட்டுதாங்கலிலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தி.நகரிலும், கவிஞர் வைரமுத்து, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்திலும் ஓட்டு போட்டனர்.நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர் தன் 92 வயது தாயாரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, மந்தவெளிப்பாக்கம் 126வது வார்டில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here