உள்ளூராட்சி தேர்தலை நடத்த நிதி வழங்காததை எதிர்த்து உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சி மனு தாக்கல்!

0
347

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான தீர்ப்பின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியே ஐக்கிய மக்கள் சக்தியால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவை பிரதிவாதிகளாக பெயரிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தீர்ப்பின் மூலம் பிரதிவாதிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவை மனு கோருகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here