இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்ப (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய இலங்கையின் பல பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கடந்த அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தமையால், தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் போலவே தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.