மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, புத்தல அருகே 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (ஜிஎஸ்எம்பி) அறிவிப்பின் படி, இந்த சிறிய நிலநடுக்கம் இன்று காலை 11.45 மணியளவில் உணரப்பட்டுள்ளது.
பெப்ரவரி 10 ஆம் திகதி மொனராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபானகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
N.S