கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், காக்கைத் தீவில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இரண்டு சந்தேக நபர்களும் 32 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பிலியந்தலை, மாதம்பிட்டிய மற்றும் மடபத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் விசாரித்ததில், காக்கை தீவில் ஒரு தொகை வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதை தேடுவதற்காக அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, ஒரு போலீஸ் அதிகாரி கையிலிருந்து துப்பாக்கியைப் பறித்து, போலீசாரை நோக்கிச் சுட்டார்.
அப்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு சந்தேக நபர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.