இலங்கைக் கடல் எல்லையில் மார்ச் 3 இல் கறுப்புக்கொடிப் போராட்டம்!  

0
157
https://we.tl/t-YvIey1kW5X?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05

இலங்கைக் கடல் எல்லையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடிப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளோம்.

இதனைத் தடுத்து நிறுத்துமாறு தொடர்ச்சியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வந்ததுடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

ஆனாலும், உரிய தீர்வு கிடைக்காத நிலையே உள்ளது. இந்நிலையில், எமக்கான தீர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.” – என்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here