திட்டமிட்டபடி நாடு தழுவிய ரீதியில் நாளை பாரிய தொழிற்சங்க போராட்டம்!

Date:

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவை தொழிற்சங்கங்கள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தம் போராட்டம் இடம்பெறவுள்ளது

வங்கி வட்டியை குறைத்தல், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் விலையை குறைத்தல், மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கல், குறைந்த நியாயமற்ற வரிகள், ஓய்வூதிய தாமதத்தை முடிவுக்கு கொண்டு வரல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ளன.

என்றாலும், துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து பயணிகள் அல்லது பொருட்கள் அல்லது உணவு மற்றும் பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் ஆகியவற்றை வெளியேற்றுதல், வண்டி ஏற்றுதல், ஏற்றுதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானியையும் பொருட்படுத்தாதே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

என்றாலும் பொது மக்கள், பாடசாலை மாணவர்களின் வசதி கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வழமை போன்று பஸ்களை இயக்குமென சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...