Monday, May 6, 2024

Latest Posts

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களு சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் அனுமதி !

சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும்.

அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி பெற்றவர்களையே அனுமதிப்பது சிறந்தது.

பூஸ்டர் தடுப்பூசி வரை பெற்றவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றும் சிவராத்திரி மட்டுமல்லாமல் பிறந்தநாள் நிகழ்வு மத நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் அல்லது ஒழுங்கு சீர் செய்யப்படல் வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒரு திறந்த வெளியில் 150 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம் முககவசம் அணிதல் தகுந்த சமூக இடைவெளிகளை பேணல் கை சுகாதாரம் பேணல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகும் என இந்து மக்களினால் நாளை அனுட்டி க்கப்படவுள்ள சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை சம்மந்தமாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணண் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.