நாட்டில் திரிபோஷாவிற்கும் தட்டுப்பாடு

Date:

கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷாவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் திரிபோஷா உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகின்றது.

தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.

மேலும், திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால் மாவைப் போதுமான அளவு பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJB தேசிய பட்டியல் எம்பி பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து...

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...