அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் அசத்தல்! – படங்கள் உள்ளே

Date:

தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அஜித் குமார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எப் 1 ரேஸராகவும் புகழ் பெற்றவர்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படமான ‘வலிமை’ வெளியாகி நான்கு நாட்களில், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61-வது படத்தின் பணிகளும் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக அஜித் 25 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களால் குட்டி தல என்று அழைக்கப்படும், அஜித்தின் மகனான ‘ஆத்விக்’ பிறந்தநாளை முன்னிட்டு அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அதில் கடுக்கன், தாடியுடன் உள்ள அஜித்துடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் குமார், மகள் அனுஷ்கா குமார் உள்ளிட்டோர் உள்ளனர். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...