சனி, ஞாயிறும் இருள், பொய்யாகிப் போன ஜனாதிபதிக் கூற்று!

Date:

P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும் E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமையன்று (6ம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...