பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஸ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவினால் ஒரு மனுவும் சாவித்திரி குணசேகரவினால் மற்றுமொரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இந்த மனுவின் பிரதிவாதிகளாக அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.