பிரதி அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் ஹட்டன் பஸ் நடத்துனர் உடனடி பணி இடை நிறுத்தம்!

0
167

அரச பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு வலியுறுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியதை அடுத்து பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து உரிய பேருந்தின் நடத்துனர் தற்போது தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.

இதன்படி, அவருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here