வானிலையில் தற்காலிக மாற்றம்

Date:

நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) நாட்டின் வரண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும், ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (09) நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

நாடு முழுவதும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

கடல் பகுதிகளில்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் அல்லது நிலையான திசை எதுவுமின்றி வீசக் கூடும் என்பதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 -35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...