Saturday, January 11, 2025

Latest Posts

கரு ஜயசூரியவின் விசேட அறிவிப்பு

2022.03.10 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள் ஆற்றிய உரை…

முழு உலகமும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் இந்த ஊடக சந்திப்பை நடத்துகின்றோம். தற்போது கோவிட் பரவல் குறைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்கான பாராட்டுகளை அரசாங்கத்திற்கும் , சுகாதார திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும், ராணுவத்தினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனாலும் அன்றாட வாழ்க்கையில் அனைத்து விடயங்களும் நலிவடைந்து, நாடும் நாட்டு மக்களும் மாபெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதை கண்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகின்றோம்.
எரிபொருள், சீமந்து, எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளது. முழு குடும்பமும் வரிசைகளில் நின்று கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையாக கருதுகின்றோம்.

அரசாங்கம் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு அறிவுபூர்வமாக செயற்பட்டிருந்தால் இத்தகைய துரதிஷ்டவசமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்காது. நாட்டின் வெளிநாட்டு சொத்து மதிப்பு அதிகளவு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 500 மில்லியன் டொலர்களை செலுத்துவதை தவிர்த்துவிட்டு , வட்டியை மாத்திரம் வழங்கிவிட்டு , கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு சர்வதேச நிதியம் அல்லது வேறு ஏதும் ஒரு நிறுவனத்தின் ஆலோசனைகளை பெறுமாறு பெரும்பான்மை கருத்து நிலவியது . சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் இதையே வலியுறுத்தியது.

இதயசுத்தியுடன் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை நாணயத்தின் பொறுமையை மிதக்க விடுவதின் ஊடாக வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சுமூகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்றும் இறக்குமதி ஊக்குவிக்கப்படும் என்றும் இறக்குமதியின் போது “முன்டேல்” முறைக்கு பதிலாக உண்மையான விலை தோற்றுவிக்கும் என்றும் நாம் தெரிவித்தோம். அப்போது தேவையற்ற இறக்குமதிகள் தானாகவே குறைந்து விடும். தாமதமாக இருந்தாலும் தற்போது அரசாங்கம் இவற்றைப் புரிந்து கொள்வது முக்கியமாகும்.

அரசாங்கம் உறுதியான கொள்கையை பின்பற்றாததன் காரணத்தினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக நாம் கருதுகிறோம். இது நிர்வாகத்தின் ஏற்பட்ட பாரிய சரிவு. 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஆட்சியின் ஒட்டு மொத்த அதிகாரங்களும் தனிநபருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படவில்லை. ஆகையால் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டியது 3/2 பெரும்பான்மை யை கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே.

அதே போன்று புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து அதன் பின் வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவற்றில் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பின் சட்டமூலத்தை முன்மொழிதல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து இரட்டை பிரஜா உரிமையை ரத்து செய்தல்.
  2. இன மற்றும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிவில் சமூகங்களுடன் சுமுகமாக செயற்படுதல்.
  3. ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.
  4. அரசியல் பழிவாங்கலை நிறுத்துதல் மற்றும் முழு சுதந்திரத்தை வழங்குதல்.
  5. வாழ்க்கை செலவை கட்டுப்படுத்துதல்.

மேல் குறிப்பிட்டிருக்கும் எந்த விடயமும் இடம்பெறவில்லை. அரசியலமைப்பு பரிந்துரைகளை தயாரிக்க வேண்டியது அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளின் குழு அல்ல. அந்த செயற்பாடுகளை செய்யவேண்டியது பாராளுமன்றம் மற்றும் மக்களே.

உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் ஊடாக மாற்று அரசியல் கருத்து உடையவர்களை பழி வாங்கி வருகின்றனர். குற்றவாளிகள் விடுதலை அடைகின்றனர்.

எதிர்க்கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளை BMICH மாநாட்டு மண்டபத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்துகின்றனர். அதன் நோக்கம் அவர்களின் அரசியல் வாழ்க்கையை இல்லாது செய்வது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கூட்டங்களை தடை செய்ய முயல்கின்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் இவர்களது எண்ணக்கருக்கள் தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளது. இது தொடர்பில் பேசுவது பயனற்றது.

புவனேகபாகு மன்னனின் அரண்மனையை இடித்தவர்களும், சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சரும் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் . எமது நாட்டு மக்கள் இவை தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். சீனி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசாரணைகளை நடத்தி வந்ததுடன் பாராளுமன்ற நிதி செயற்குழுவில் இது மோசடி சம்பவம் என்று இனங்காணப்பட்டது. இவைகளுக்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மத்திய வங்கி மோசடியை விட சீனி மோசடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள், நிதி அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 5ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு ஏற்படாது என்று பகிரங்கமாக வாக்குறுதி வழங்கினர், ஆனால் அந்த வாக்குறுதி சில மணித்தியாலங்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 7 மணித்தியால மின்வெட்டு இடம்பெற்று வருகின்றது.

20 ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டு மக்களின் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும் காரணத்தினாலேயே நாம் இந்த விடயங்களை தெரிவிக்கின்றோம்.

அரச தலைவர் வாக்குறுதிகளை மீறும் போது மக்கள் செல்வாக்கு குறைந்துவிடும் . அதேபோன்று அரச தலைவரின் எதிர்கால வாக்குறுதிகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த நெருக்கடிகளில் இருந்து எமக்கு மீண்டு வர முடியும். உலகப் போர்களால் சாம்பல் ஆக்கப்பட்ட நாடுகள் தேசிய ஒருமைப்பாட்டின் மூலமாக வளர்ச்சி அடைந்தது. ஜெர்மன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை முன்னுதாரணமாக எடுக்கவும்.

1991 இந்தியாவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு முகம் கொடுத்தது . கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 15 நாட்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அவர்களிடம் அந்நிய செலாவணி இருந்தது.
அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் உலகவங்கியின் அனுபவமுடைய கலாநிதி மன்மோகன் சிங் அவர்களை நிதி அமைச்சராக நியமித்தார். மத்திய வங்கிக்கு அறிவு சார்ந்த பொருளாதார நிபுணர்களை நியமித்தார். அரசியல்வாதிகளுக்கு அந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்கு இடமளிக்கவில்லை. பிரதமர் ராவோ அவர்கள் 15 அரசியல் கட்சிகளுடன் “அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கும் பொது வேலைத் திட்டம்” என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இதன் காரணமாக இந்தியாவில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக இருந்த அன்னிய செலாவணி இருப்பு 2004 ல் 100 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது அந்த அந்நிய செலாவணி இருப்பு 650 பில்லியன்கள் ஆகும். நோய்தொற்று வந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தது . தற்போது இந்தியா உலக வல்லரசு நாடாக திகழ்கின்றது.

உலகப் பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர்களால் சீனாவின் பொருளாதார செயற்பாடுகள் கையாளப்படுகின்றது. 80வது தசாப்தத்தில் ஆட்சியிலிருந்த மென்க் சியோ பின் அவர்கள் ஜியான் சமான் அவர்களை ஜேஆர் ஜெயவர்தன அவர்கள் உருவாக்கிய (Public Private Partnership) தொடர்பில் கற்பதற்கு அனுப்பி வைத்திருந்தார். அவர்கள் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு மாத்திரமே விஜயம் மேற்கொண்டிருந்தனர். எம்மவர் பலருக்கு இந்த விடயம் தெரியாது என்றாலும் சீன அறிக்கைகளில் இது தொடர்பில் குறிப்புகள் உள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான குறைந்தபட்ச வேலைத்திட்டம் என்ற பெயரில் முன்மொழிவு ஒன்றை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சமர்ப்பித்து இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆட்சியில் இருப்பவர்கள் மற்றும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாமல் இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நட்புக்கரம் நீட்டுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். 69 லட்சம் வாக்காளர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வாக்களித்த போதிலும் , 62 லட்சம் பிரஜைகள் இவரை அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் அவர் தற்போது அனைவரினதும் அரச தலைவராவார். இந்த விடயத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.