டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் விரைவான டொலர் வரவால் நாட்டில் டொலர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.
இதன்மூலம் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களின் சாதாரண இறக்குமதியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை, ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அதிக வரிகளை அறவிடுவதே மிகவும் புத்திசாலித்தனமானது என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.