சீருடையில் மசாஜ் நிலையம் சென்ற பொலிஸ்!

0
125

உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது இலக்கம் ஒன்று சீருடை அணிந்து மசாஜ் நிலையத்தின் சேவைகளைப் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை யக்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சீருடையை பொலிஸ் காவலில் எடுத்து வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

தொம்பே பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு சீருடை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜன்ட் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவிருந்த ஆவணங்களை முன்வைக்க தொம்பே காவல்துறையின் மற்றுமொரு அதிகாரி யக்கல பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி வீதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் சீருடை அணிந்த ஒருவர் வருகை தந்துள்ளதாக யக்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அதிகாரிகள் குழுவொன்று ஸ்தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here