வடக்கின் தலைமைச் செயலாளருக்கு நியமனக் கடிதம் கையளிப்பு

0
133

வடக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்றையதினம் நியமிக்கப்பட்டார்.

அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்றையதினம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியான எல். இளங்கோவன், கடந்த காலங்களில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளர் பதவியை வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் வடக்கு மாகாண அபிவிருத்திகள் தொடர்பான அரச தலைவரின் மேலதிக செயலாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here