40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
துறைமுக, ஆசிரிய, சுகாதாரசேவை, வங்கி, நீர்வழங்கல், மின்சார உட்பட 40 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதனால் நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக உயர்த்தி ஆசிரியர்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
N.S