ரயில்வே ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து!

0
152

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில்வே துறை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் பெப்ரவரி 23 ஆம் திகதி அத்தியாவசியயாக ரயில் சேவை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை புகையிரத சேவையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் 2023 மார்ச் 14 ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

புகையிரத சேவையை தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் பேணுவதற்கு நாளை (15) பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களிடமும் விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here