மலேசியாவில் கைதான இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட அனைவருக்கும் நடக்கப் போவது என்ன?

0
224

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் முழுமை விபரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

158 பேர் மலேசியாவில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இருந்தமை கண்டறியப்பட்டதாக குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் அப்த் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள், 8 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் அடங்குகின்றனர், இவர்கள் இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், பங்களாதேஸ், சீனா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உரிய அங்கீகாரம் இன்றி வெளிநாட்டவர்களுக்கு தமது குடியிருப்புக்களை வாடகைக்கு விட வேண்டாம் என உள்ளூர் வீட்டு உரிமையாளர்களை குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here