ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது என்ற தொனிப்பொருளில் 11 கட்சிகள் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குடும்ப இரவு உணவு மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதன் விளைவுகளை முழு நாடுமே இன்னல்களை அனுபவிப்பதற்கு காரணம் என அவர் தெரிவித்தார் .