உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வட்டாரங்களை நிர்ணயம் செய்யும் தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (மார்ச் 19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம்.
எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல.
குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது அது கடினமாக இருப்பதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
N.S