இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து யாழ். மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

0
156

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப்  போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்புபி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 9:30 மணிக்கு மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகம் நோக்கிச் சென்ற மீனவர்கள் துணைத் தூதரகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்துக்கு முன்பாக தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here