லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பதற்றம் – உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட பயணி

0
156

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க நேரிட்டது.

தைவானுக்குச் சொந்தமான இவிஏ ஏர் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்ததாக தி சன் நாளேடு தெரிவித்தது.

விமானத்தின் கழிவறையில் அந்தப் பயணி உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களும் விமான மருத்துவப் பணியாளர்களும் உடனடியாக தலையிட்டு அந்தப் பயணிக்கு உதவினர்.

உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றில் விமானம் தரையிறங்கியதும், அந்தப் பயணிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பிஆர்67 பேங்காக்-லண்டன் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்ததை இவிஏ ஏர் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here