புது வருடத்துக்கு முன் பரீட்சை பெறுபெறு

0
27

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரணதரப் பரீட்சைத் தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள், ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

செய்முறைத் பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here