உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார்? – மைத்திரிபால சிறிசேன

0
129

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கண்டியில் இதனைக் தெரிவித்தார்

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு நடந்தது என்பதையும் நாம் அறிவோம். அந்த வழக்குகள் அனைத்தையும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் யார் செய்தார்கள் என்று இதுவரை யாரும் கூறவில்லை, ஆனால் அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதைச் சொல்லத் தயாராக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here