2022 கல்வியாண்டின் 3வது தவணை நாளை முடிவடைகிறது!

0
104

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மாணவர்கள் 60 சதவீதத்திற்கு மேல் பள்ளிக்கு வர முடியாததால், இந்த ஆண்டு நாங்கள் பள்ளி விடுமுறைக்கு அதிக நாட்கள் கொடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

எனவே, இயன்றளவு பாடசாலை நேரத்தை ஒதுக்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், கல்வியாண்டின் முதலாம் தவணையை திங்கட்கிழமை (27) ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து பாடசாலைப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை (28) மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here