பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.
மெர்வின் சில்வா தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனுவை நிராகரித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படும் குற்றங்களை இழைந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவர் கடந்த 6ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.