உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான குழுவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
சரிவு இல்லாமல் தொடர்ந்து செயற்பட தேவையான வழிகாட்டல்களை இந்தக் குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.