ஒரு பில்லியன் டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் வர்த்தகம் குறித்து இலங்கை பேச்சு!

0
175

இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் (INR) நாணய மாற்று வசதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கியுள்ளது.

”இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இது 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமானதாக இருக்கலாம். இது இலங்கை-இந்திய வர்த்தகத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ்ட பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று மத்திய வங்கியின் வங்கியின் ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் குழு கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு பெறப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை திருப்பிச் செலுத்துவதையும், ஆசிய கிளியரிங் யூனியனின் கீழ் உள்ள கடனையும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க இந்திய அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

“நாங்கள் அந்த பணத்தை ஐந்து வருட காலத்திற்குள் செலுத்த முயற்சிக்கிறோம். இது இன்னும் ஆரம்ப நிலை பேச்சுவார்த்தைகளில் உள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பல நாணய பரிமாற்ற வசதிக்கான நீண்ட கால நீடிப்பை இலங்கை பெற வாய்ப்பில்லை என கலாநிதி குமாரசுவாமி குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் வழங்குநராக இருக்கும் சீனாவில் இருந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், கொழும்பு துறைமுக நகரம் போன்ற சீன நிதியுதவியுடன் கூடிய மெகா திட்டங்களுக்கு சீனாவிடமிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அரசாங்கம் முக்கியமாக எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான உறவுகள் முக்கியமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உணர்வுகள் நேர்மறையாக மாறும் என்றும், அது கொழும்பு பங்குச் சந்தை மற்றும் அரசாங்கப் பத்திரச் சந்தைக்கு புதிய அந்நிய நேரடி முதலீடு மற்றும் வரவுகளை வரவழைக்கும் என்றும் டாக்டர் குமாரசுவாமி கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here