தேசபந்து விடயத்தில் அரசுக்கு முழு ஆதரவு – சஜித்

0
146

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அன்றைய தினம் அரசியலமைப்பு சபையில் இந்த நியமனத்திற்கு எதிராக வாக்களித்தது ஐக்கிய மக்கள் சக்தி என்று பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுக்காக இன்று (25) நடைபெற்ற பட்டறையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ஐஜிபி நியமனம் அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும், அந்த அரசியலமைப்பை மீறியதற்கு முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகரும் பொறுப்பு என்றும், அரசியலமைப்பு சபையில் நடந்ததை முற்றிலுமாக சிதைத்து உச்ச சட்டத்தின் அப்பட்டமான மீறலில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேசபந்து தென்னகோன் அரசியலமைப்பை மீறி, உச்ச சட்டத்தை மிதித்து சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட அந்த நாட்களில், இன்று கூச்சலிடுபவர்கள் அப்போது அமைதியாக இருந்தனர் என்றும், தாமதமாகிவிட்டாலும், இதுபோன்ற ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here