யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும் தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதால் அவர்களிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இதற்கமைய அம் மட்டபத்தை இதுவரை பராமரிக்கும் யாழ்ப்பாணம மாநகர சபையை எதிர் வரும் 6ஆம் திகதிக்கு முன்பு கையளிக்குமாறு ஆளுநர. எழுத்தில் அறிவித்த நிலையிலேயே தற்போது தொல்பொருள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாவலர் மண்டபத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து மாநகர சபையை விளக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர் தொல்பொருள் திணைக்களத்தினரையும் அங்கிருந்து வெளியேறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அங்கிருந்து வெளியேறும் தொல்பொருள் திணைக்களத்தினர் தமது பொருட்களை பிறிதொரு இடத்தை தேர்வு செய்து காட்சி படுத்துவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் வடக்கு ஆளுநரின் உத்தரவிற்கு தமிழ் எத்தியோகத்தரகள் மட்டுமே கட்டுப்பட்டு நடப்பர் எனவும் தொல்லியல்த் திணைக்களம் முழுக்க முழுக்க சிங்கள உத்தியோகத்தர்களின் ஆளுகையில் இருப்பதனால் தொல்லியல் திணைக்களத்தை வெளியேற்றுவது கெதிரைக் பொம்பாகவே அமையும் என மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.