நெடுங்கேணியை அடுத்து கொக்குத்தொடுவாயிலும் சிவன் இடிப்பு!

Date:

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் மற்றும் முல்லைத்தீவு மணற்கேணி ஆகிய இரு சிவன் ஆலயங்கள் ஒரே காலத்தில்  உடைக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவன் ஆலயம் உடைக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு
மாவட்டத்தின்  எல்லைக் கிராமமான  மணற்கேணி சிவன் ஆலயமும் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லைக் கிராம சிவ சின்னங்களை அழிப்பது  சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு  பௌத்த மயமாக்கத்தை முண்ணெடுக்கும் சதிச் செயலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

வடக்கு மாகாண  எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக சைவ வழிபாட்டு அடையாளங்கள் வேண்டுமென்றே  திட்டமிட்டு அரச திணைக்களங்களால் காணாமலாக்கப்படுவதாகவே வடமாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அனைத்து விக்கிரகங்களும் உடைக்கப்பட்டதனை நேற்றைய தினம் அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு இதனை உடன உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்குரிய அடுத்த கட்ட வழிமுறை தொடர்பில் நாளை ஆராயவுள்ளனர்.

TL

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...