2 பார் லைசன்கள் பெற்று கோடிக் கணக்கில் அள்ளிய மத்திய மாகாண எதிர்க்கட்சித் தமிழ் எம்பி யார்..?

Date:

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி தமிழ் எம்பி ஒருவரால் இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இரண்டு அனுமதிப்பத்திரங்களையும் குறித்த எம்பி கண்டி திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் இருவருக்கு இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வதாக கூறி அவர் இந்த இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தகவல் வெளியானதையடுத்து, திகன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தலைவர், உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற வர்த்தகர்களை அழைத்து இது தொடர்பில் கேட்டுள்ளார்.

அங்கு குறித்த எம்.பி.தான் இந்த உரிமங்களை வழங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் குறித்த தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பிக்கள் பெயர் பட்டியல் கீழே உள்ளது.

விடயம் உண்மை என்றால் இதில் யாரேனும் ஒர எம்பியே சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

01.வேலுகுமார் – தமிழ் முற்போக்கு கூட்டணி

02.திகாம்பரம் – தமிழ் முற்போக்கு கூட்டணி

03. உதயகுமார் – தமிழ் முற்போக்கு கூட்டணி

04. அலீம் – ஐக்கிய மக்கள் சக்தி

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...