பள்ளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபையில் சாதாரண தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (மார்ச் 27) பிற்பகல், கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியவத்த சந்தி பகுதியில் குழாய் அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குழாய் அமைப்பில் தவறி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை காப்பாற்ற மற்றைய நபரும் குழிக்குள் இறங்கியதாகவும், அவரும் குழிக்குள் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிப்பவர்களாவர்.