ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கியமைக்கான கடிதம் அனுப்பிவைப்பு!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க, தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதில் கடித்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் ஜனக ரத்நாயக்க தனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே மேற்கொண்டுள்ளார் என்றும், பொது சபையாக அல்ல என்றும் அவர் மீது அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியிருந்த பின்புலத்திலேயே மேற்படி கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...

லஞ்சம் பெற்ற பொலிசார் கைது

அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள்...

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...