சர்வதேச சுழியக் கழிவு தினமான மார்ச் 30ஆம் திகதி (நாளை) சிகரம் நிறுவனத்தின் வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட யாழ் ஆரோக்கிய பவனி தூய்மையாக்கல் பணியும். விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தியத் துணைத்தூதரகம், யாழ். மாநகர சபை யாழ் பிரதேச செயலகம், தொல்லியல் பணிமனை மற்றும் யாழ். பொலிஸாரின் நேரடிப் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் யாழ், நகரின் பிரதான வீதிகள் சிலவற்றின் ஊடாகவும், யாழ்ப்பாணத்தின் சுற்றுலா ஈர்ப்பு வயைமாகக் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரம் முதல் பண்ணை சுற்றுவட்டம் வரையிலான பகுதியிலும் தூய்மையாக்கல் முன்னெடுக்கப்படவுள்ளது.