இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 309 ரூபாயாக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
95 ஆக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ. 361.