இந்திய இராணுவ படை இலங்கை வரவுள்ளதை மறுத்த இந்திய உயர் ஸ்தானிகராலயம்

Date:

இலங்கையில் நிலவும் நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக இந்தியா தனது படை வீரர்களை இலங்கை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா தனது படைவீரர்களை இலங்கைக்கு அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது. மேலும் உயர் ஸ்தானிகராலயம் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கையிடலைக் கண்டிப்பதோடு இவ்வாறானவர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.’ என்று தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலை உயர்வு , அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொது மக்களால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாட்டில் அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது, என இணைய ஊடகங்களில் செய்தி வெளியாயிருந்தது.

இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...