வெட்டி அகற்றப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின் உயிர் பெற்றது

Date:

கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவொன்று உடலிலிருந்து வெட்டிப் பிரிக்கப்பட்ட கையை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு அவரது இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கையின் துண்டிக்கப்பட்ட பகுதியை ஐஸ் கட்டியில் வைத்து கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயக்க மருந்து நிபுணர், செவிலியர் பணியாளர்கள், சுகாதார உதவிக் குழுக்கள், ரத்த வங்கி என ஏராளமானோரின் ஆதரவு இந்த சத்திரசிகிச்சைக்கு பெறப்பட்டுள்ளது.

திறமையான இலங்கை வைத்தியர்களின் முயற்சியால் இழந்த கை மீண்டும் உயிர்பெற்றது. இத்தகைய திறமையான மருத்துவர்கள் நாட்டின் பெருமைக்கு உரியவர்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...