ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர். கட்சி உரிய தீர்மானம் எடுக்கத் தவறினால் அவர்கள் ஒரு குழுவாக ஆதரவளிப்பார்கள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஹர்ஷ டி சில்வா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுளளார்.
“பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள், ஆனால் அவருடன் தேர்தலில் போட்டியிட சற்று தயக்கம் காட்டுகின்றனர். ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி தனித்தனியாகச் சென்றது கொள்கை வேறுபாடுகள் இருந்ததால் அல்ல. ஜனாதிபதி முடிவெடுக்கும் பாணியில் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கவில்லை.ஜனாதிபதி நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்ற கருத்து யதார்த்தமானது”- என்றும் தெரிவித்த்துள்ளார்.
N.S