தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை பயங்கரவாதிகள் என வரையறுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே தமிழ் மக்களுக்கும், தென்னிலங்கை இளைஞர்களுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக பயங்கரவாத முத்திரை குத்தியிருந்த நிலையில் தற்போது தொழிற்சங்க செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஆணை இன்றியே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பயங்கரவாதத்தை வரையறுக்க அவருக்கு எவ்வித அதிகாரம் இல்லை.
போராட்டங்கள் மற்றும் மக்களின் எழுச்சிகள் ஜனாதிபதியால் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்படுகிறது. இது நகைச்சுவையாகும். இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற முறையில், புதிய பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பயங்கரவாதத்தை வரையறுக்க அரசு அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S